Muslim League இன் Opportunism சமூகத்திற்கானதா?
விசிக போன்ற அம்பேத்கரிய இயக்கங்கள் opportunistic- ஆக இருப்பது வரவேற்கத்தக்கவை தான். அம்பேத்கர் எந்த அளவுக்கு Opportunistic- ஆக இருந்து சமுகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வரைமுறையை வகுத்து விட்டுச் சென்றுள்ளார். சாதியக் கட்டமைப்புகளின் புகழிடமாக காங்கிரஸ் இருந்ததை அவர் எதிர்த்தார்.அவரது அரசியல் காங்கிரஸுக்கு எதிராகவே இருந்தது.ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர் என்கிற மாபெரும் பணியை காங்கிரஸ் அவருக்கு வழங்கியபோது, அந்த Opportunity- யை அவர் தவறவிடவில்லை. அவர் Opportunistic – ஆக அந்த வாய்ப்பை பயன்படுத்தியதால்தான் இன்று நமக்கு மதச்சார்பின்மை , மற்றும் சமத்துவத்தை அடிபடையாக கொண்ட அரசியலமைப்பு , பெண்களுக்கு சொத்து , திருமணம் , விவாகரத்து உரிமைகள், தலித்/பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு கிடைத்துள்ளது அவரது Opportunistic முடிவு சுயநலமானது அல்ல; அது இந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஆனது. தோழர் வன்னியரசும் அதே வழியில் அமைச்சர்பதவியை ஏற்று, சில புரட்சிகரமான செயல்களை செய்து கொண்டிருக்கிறார். வரவேற்கிறேன், வாழ்த்துக்கள். ஆனால் IUML (Indian Union Muslim League) O...
